பக்கம்:மலர் மணம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 209.

தான் எனக்கு ஆறுதல் அளித்து வந்தான். உள்ளுரி லேயே இருந்ததால், மாறன் பெரும்பாலும் எங்கள் விட்டிலேயே வளர்ந்து வந்தான். என் மலரும் என்னுடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? எங்கள் குழந்தைக்கு மலர் ‘ என்று அல்லி பெயர் வைத்திருக்கிருளாம். அழகான பெயர் மலரை எண்ணி எண்ணி மாழ்குவேன். என்னை நினைத்து அல்லி என்ன பாடு பட்டிருப்பாளோ ! இப்படியே இரண்டாண்டுகள் கழிந்தன.

குழந்தையின் ஏக்கம் பெரிய ஏக்கமா யிருந்தது. ஒருநாள், மாமாவுக்குத் தெரியாமல் கொஞ்ச நேரம் குழந்தையை அனுப்பி வைக்கும்படி அல்லிக்குச் சொல்லி யனுப்பினேன். அல் லியோ டும் குழந்தையோடும் தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்ட முதல் முயற்சி தான் இது !

மாமா வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அல்லி குழந்தையைக் கொடுத்தனுப்பினுள். மலர் என்றால் மலர்தான்! இது என்ன மலரோ! முல்லையோ-மல்லி கையோ செந்தாமரையோ-செம்பருத்தியோ ! இல்லை யில்லே-என் அழகு மலர் அல்லி மலர்தான் !-அல்லி பெற்றெடுத்த அல்லி மலரேதான் !

என் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. நான் துர்க்கி முத்தம் கொடுப்பதற்குமுந்தியே வீட்டிற்கு வந்திருந்த கற்பகம், என் அணேப்பிலிருந்து மலரைப் பறித்துக்கொண்டாள்-இல்லையில்லை-க ல் லி ல் நார் உரிப்பதுபோல, என் வச்சிரப் பிடியிலிருந்து மலரைப் பிய்த்து இழுத்தாள். அவள் கையிலிருந்து அம்மா கொய்து கொண்டார்கள். அம்மா கையிலிருந்து அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/211&oldid=656221" இலிருந்து மீள்விக்கப்பட்டது