பக்கம்:மலர் மணம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 21f.

அழுகையை நிறுத்திவிட்டு அவனே நெருங்கிள்ை. சைக்கிளேத் தொட்டுப் பார்த்தாள். மாறனுக்குப் பின்னல் அவளேயும் ஏற்றி உட்காரவைத்தோம். சிறிது நேரம் சைக்கிள் சவாரி நடந்தது. குழந்தைகள், விளை யாட்டுப் பொருள்களின்மூலம் விரைவில் பிற குழந்தை களோடு தொடர்பு கொள்வார்கள்-என்று உளநூலில் படித்தறிந்த செய்தியை அப்பொழுது நான் நேரில் கண்டேன். திடீரென்று ஏதோ தடுக்கியதால் சைகிள் கவிழ்ந்தது. மலரும் மாறனும் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து கட்டிக்கொண்டார்கள். குழந்தைகளேத் தூக்கி விட்டோம். மலர் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த அழுகை கடைசிவரை நிற்கவ்ேயில்லை.

அப்பொழுது அல்லியிட மிருந்து ஆள் வந்தான். மாமா விட்டிற்குத் திரும்பும் நேரமாயிற்றாம் அதற்குள் மலரை விரைவில் கொடுத்தனுப்பி விடவேண்டுமாம் ; இல்லாவிட்டால் ஏதாவது வினை நேர்ந்துவிடுமாம்.-இது வந்தவன் தந்த விளக்கம். இதைக் கேட்டதும், அப்பா சீறி விழுந்தார். ‘ அவன் கிடக்கிருன் சடையன் ; குழந் தையைக் கொடுத்தனுப்ப வேண்டாம்; இங்கேயே இருக்கட்டும். அவன் வீட்டுப்பெண்ணை (அல்லியை) வேண்டுமானல் அவனே வைத்துக்கொள்ளட்டும். நம் விட்டுப் பெண்ணே (மலரை) நாமே வைத்துக் கொள்வோம்” என்று அப்பா பொரிந்து தள்ளினர். அது முறையாகுமா ? அம்மாவும் நானும் ஒத்துக்கொள்ள வில்லை. மேலும், தாயைப் பிரிந்து சேய் எப்படி யிருக்க முடியும் ? எனவே, மழையென மு த் த ங் க ளே ப் பொழிந்து, மனமின்றியே மலரைக் கொடுத்தனுப்பி னுேம். என்னேயும் அறியாது என் கண்களில் நீர் மல்கியது. உலக வழக்கில், மகளைக் கணவன் வீட்டுக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/213&oldid=656223" இலிருந்து மீள்விக்கப்பட்டது