பக்கம்:மலர் மணம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 213

எங்கே என்று கேட்டாராம். அல்லியும் அத்தையும் ஏதோ சாக்கு போக்கு சொன்னர்களாம். ஆணுல், வீட்டிலிருந்த சிறு பிள்ளைகள் உண்மையைச் சொல்லி விட்டார்களாம். மாமா நரசிம்ம அவதாரம்’ எடுத் தாராம். அந்த நேரத்தில்தான் இவன் மலரை இங் கிருந்து அழைத்துக்கொண்டு போயிருக்கிருன். அவர் மலரைக் கண்டதும், அந்த வீட்டுக்குப் போய்வந்த குழந்தை இனி இந்த வீட்டில் இருக்கவே கூடாது; அங்கேயே கொண்டுபோய் விட்டுவிடுங்கள் என்று ஆணேயிட்டாராம். அத்தையும் அல்லியும் மறுத்தார் களாம். அப்படியென்றல், குழந்தையையே கொன்று விடுவேன்-அல்லது, நான் தற்கொலை பண்ணிக்கொள் வேன்-இரண்டில் எது வேண்டும் உங்களுக்கு ?’ என்று மாமா குதியாய்க் குதித்தாராம். அத்தையும் அல்லியும் அஞ்சிக் குலே நடுங்கி, குழந்தையை இங்கே அனுப்பி வைத்து விட்டார்களாம்

-என்று வந்தவன் சொல்லி, குழந்தையை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றன். குழந்தை வந்தவரைக்கும் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆல்ை இந்த முறையிலா வருவது? தாயைப் பிரிந்து தனியாகக் குழந்தை எப்படியிருக்கும் ? அல்லிதான் எவ்வாறு குழந்தையைப் பிரிந்திருக்க முடியும்? இது மிகக் கொடுமை. ஏன்தான் அந்த மாயாண்டி முதலிக்கு இத்தனே கேடுகெட்ட எண்ணமோ ? பெரியவர்களின் மனக்கோணலால் உலகில் எத்தனையோ குழந்தைகள் பலியாகி உள்ளனவே !

மலர் வந்தால் போதும் என்று இருந்தது போக, அவள் போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஆகிவிட்டது எங்களுக்கு அம்மாவிடம் கொண்டுபோய் விடுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/215&oldid=656225" இலிருந்து மீள்விக்கப்பட்டது