பக்கம்:மலர் மணம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மலர்

பள்ளிக்கூடத்தின் நடைமுறையைப் பற்றி ஆரம் பத்தில் மலருக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. போகப் போக அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாது என்னிடம் விவரிக்கத் தொடங்கிள்ை. அவளது பள்ளி வாழ்க்கையைப் பற்றி அவள் வாயால் நாடோறும் கேட்டுக் கொண்டிருப்பதுதான் எனக்கு இனிய பொழுது போக்கு. ஆசிரிய அக்காமார்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவாள்-நிரம்பச் சொல்லுவாள். ஆசிரியைகள் எல்லாரும் அவளுக்கு அக்கா முறைதான். அக்காமார்களே அவளுக்கு நன்முகப் பிடிக்குமாம். அவர்கள் அவளே நன்முகக் கவனித்து வந்தார்களாம். உனக்கு எந்த அக்காமேல் மிகுந்த விருப்பம் ? என்று நான் அவள் வாயைக் கிண்டுவேன். குறிப்பாக, மங்களம் அக்கா வைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்வாள். அந்த அம்மா, மலருக்குத் தலைவாரி விடுவாளாம். மதியம் உணவு பரிமாறும்போது, சில சமயம் ஊட்டியும் விடுவாளாம். நல்ல ஆசிரியை மார்கள்! நல்ல பள்ளிக்கூடம்! வீட்டிற்கும் பள்ளிக்கும் வேற்றுமை தெரியாமல் மலர் நன்கு படித்து வளர்ந்து வந்தாள்.

இப்பொழுது மலர் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிருள். முன்னிலும் பன்மடங்கு பள்ளிக் கூட நிகழ்ச்சிகளைப்பற்றிச் சொல்லுவாள். ஒருநாள் வியத்தகு செய்தியொன்று வெளியிட்டாள். அன்று விடுமுறை நாள். ஆலுைம் ஏதோ விழா நடந்ததால் மலர் பள்ளிக்கூடம் சென்றிருந்தாள். அப்படியே இன்னும் சில சிறுமியருடன் சேர்ந்துகொண்டு, அண்மையில் உள்ள மங்களம் அக்கா வீட்டிற்குச் சென்றாளாம். அங்கே மங்களத்தின் படுக்கை அறையில் ஒரு படம் மாட்டியிருக்கக் கண்டாளாம். என் படுக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/234&oldid=656245" இலிருந்து மீள்விக்கப்பட்டது