பக்கம்:மலர் மணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மலர்

மருவி மருவி நின்றாள். யார் முதலில் பேசுவது? என்ன பேசுவது? சிறிதுநேரம் இருதரப்பிலும் அமைதி. இந்த அமைதிப் போட்டியில் அவளே வென்று விட்டாள். நான்தான் முதலில் பேச்சைத் தொடங்கினேன்.

9 y

“ உன் கடிதம் ............ “ஆமாம் நான்தான் போட்டேன்.”

“யாருக்கும் தெரியாமல் எவ்வாறு போட்டாய் ?”

“அப்பா எப்போதும் நிறைய அஞ்சல் தலைகளும் உறைகளும் வாங்கி வைத்திருப்பார்கள் அல்லவா ? தெரியாமல் எடுத்து எழுதி ஒட்டி, பக்கத்து வீட்டுப் பையனைக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வரச் சொன்னேன்.”

“நான் இப்போது வருவேன் என்று எவ்விதம் தெரியும் ? எப்படி என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தாய்.”

வெளிக் கிராமத்திலிருந்து புது வேலைக்காரன் ஒருவன் வீட்டுக்கு வந்திருக்கிருன். அவன் வண்டி கட்டிக் கொண்டு அப்பாவையும் அம்மாவையும் ரயிலுக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டு விட்டு, சிறிது நேரத்துக்கு முன்தான் வந்தான். நீங்கள் ஒருவேளை இந்த ரயிலில் வந் தாலும் வரலாம் என்று எண்ணி, நம்மூர் மனிதர் யாரையும் ரயிலடியில் பார்க்க வில்லையா ? என்று அவனைக் கேட்டேன். :யாரோ ஒருவர் இளைய ‘மைனர்’ போல் தெரிகிறது. காசு தருவதாகச் சொல்லி வண்டிவரச் சொன்னர். நான் காசு வாங்க மாட்டேன், சும்மா வேண்டுமானல் வாங்க என்று சொன்னேன். பிறகு யாருடைய வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/26&oldid=656265" இலிருந்து மீள்விக்கப்பட்டது