உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலர் மணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மலர்

கன்னியரின் மேனியொடு கலந்து நுகரும் இன்பத்தைப் பற்றிக் கற்பனைகள் செய்து கனவு உலகத்தில் திரிந்த துண்டு; ஆல்ை ? ஒரு கட்டிளங் கன்னி இப்பொழுது தன் மெல்லிய மெத்தென்ற உடலை என்மேல் கிடத்தி யிருந்தும், எனக்கு எத்தகைய இழிந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. அல்லியின் கரைகாணுக் காதல் எனக்குப் புலப்பட்டு விட்டது. எப்படியாவது அவளே மணந்து கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும் என்ற உணர்வு இப்பொழுதுதான் எனக்குத் தோன்றிற்று. அளவற்ற அன்பு வெள்ளத்தில் ஆழ்ந்தவய்ை, அவளது தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே பேசத் தொடங்கினேன். -

{ { அல்லி” ‘ அத்தான்.’ ‘ என் கல் மனத்தையும் கரைத்துவிட்டது உன் காதல். கவலைப்படாமல் எருந்திரு. கண்ணிரைத் துடைத்துக்கொள். உன் விருப்பத்தை நிறைவேற்ற என்னுல் முடிந்தவரையும் முயற்சி செய்வேன்’

‘ உண்மையாகவா அத்தான் ” “ஆம், உண்மைதான்; நான் எப்படியாவது என் தந்தையை ஒத்துக்கொள்ளச் செய்துவிடுகிறேன். நீ உன் அப்பாவைக் கவனித்துக்கொள்”

அது சரி, புதன்கிழமை நடக்கவிருக்கும் பரியம் என்ன ஆவது அத்தான்” - .

‘ அதைத் தடுக்க வழியிருக்கிறது. என் அப்பா வோடு கலந்து முயன்று ஆவன செய்கிறேன்.”

“ ஒருவேளை அதைத் தடுக்க முடியாது போல்ை, வேறு மாற்று வழி......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/44&oldid=656285" இலிருந்து மீள்விக்கப்பட்டது