பக்கம்:மலர் மணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மலர்

யாகும்-என்று இக்கால உளநூல் அறிஞர்களும் கல்வி வல்லுநர்களும் கூறுகின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையாகவே படுகிறது. அல்லி! இக்கருத்துக் களே யெல்லாம் நீ நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் மீண்டும் இப்படிப் பேசுவதைக் கொண்டு உன்னைக் கைவிட்டு விட்டதாக எண்ணுதே. எதற்கும் முன்கூட்டிச் சொல்லி வைத்தேன். நான்போய், இன்றைக்கே ஆகவேண்டிய காரியங்களை முழுமூச்சுடன் கவனிக்கிறேன். முதலில் பரியத்தை உடைக்கவேண்டும்; பிறகு நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வளவையும் இரண்டு மூன்று நாட்களில் கவனித்து விட்டு, நான் கல்லூரிக்குப் போயாக வேண்டும். இன்னும் இரண்டு மாதப் படிப்பே உள்ளது. அதனை வெற்றியுடன் முடிக்க வேண்டு மல்லவா ?’

‘நான் அத்தானுக்கு மிகவும் கடமைப்பட் டிருக் கிறேன்”

“ கமக்குள் என்ன இது சரி, விடிந்ததும் நம் ஊர் மலேக்கோவிலில் நடக்க விருக்கும் ஊருணிப் பொங்கல் விழாவுக்கு நீயும் வருகிருயா ?”

‘ வரத்தான் இருக்கிறேன். அதற்காகத் தானே உங்களே இந்த விழாச் சமயத்தில் வரவழைத்தேன்’

இந்த நேரத்தில், சிவபூசையில் கரடி விடுவது போல், அல்லி-அல்லி என்று பாட்டி அழைக்கும் ஒலி முன்கட்டிலிருந்து வந்தது. -

“ பாட்டி விழித்துக் கொண்டாள் அல்லி! நான் வருகிறேன். விழாவில் கண்டு கொள்வோம்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/46&oldid=656287" இலிருந்து மீள்விக்கப்பட்டது