பக்கம்:மலர் மணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 6f

எல்லோரும் மலைவளங் காணப் புறப்பட்டு விட்டனர். அருவிகளில் ஆடினவர் சிலர்-சுனைகளில் படிந்தவர் சிலர்-மலேயுச்சிக்கு விரைந்து ஏறிச் சென்றவர் சிலர்பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கும் சோலைகளின் இடையே அமர்ந்து இளைப்பாறினவர் சிலர். விழாவிற் காகப் போட்டிருந்த கடை களி ல் பொருள்கள் வாங்கினவர் சிலர்.

சிறுவர் சிறுமியருள் சிலர் ஈச்சம் பழம் பறித்தனர்.-- சிலர் களாப்பழம் பறித்துப் புசித்தனர். காவல் மரங் களில் ஏறிக் கனி கொய்து களித்து உண்டனர் சிலர்மலர் எடுத்துத் தொடுத்து மகிழ்ந்தனர் சிலர். இதற் கென்றே கொண்டுவந்திருந்த கயிற்றை மரக்கிளைகளில் கட்டிச் சிலர் ஊஞ்சலாடினர். சிலர் தின்பண்டக் கடை களையும் பொம்மைக் கடைகளையும் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், தேவையானதை வாங்குவது மாயிருந்தனர்.

இந்தக் காட்சிகளே யெல்லாம் கண்டு கொண்டே கற்பகமும் நானும் சுற்றிவந்தோம். இடையிடையே காண்பவரிட மெல்லாம், எங்கள் த ந் ைத ைய நாட்டாண்மைக்காரராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி யு ம் வந்தோம். எங்களைப் போலவே அல்லியும் தன் தம்பி தங்கையுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவதையும் கண்டோம். சமயத்தை எதிர்பார்த் திருந்த என் தங்கை, இப்பொழுது ஒரு புது வழியில் பேச்சைத் தொடங்கினுள் :

! “ஏன் அண்ணு ! நீ காலேயில் ஊரிலிருந்து வந்த போது, ரயிலடியிலிருந்து நேரே வீட்டிற்குத்தான் வந்தாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/63&oldid=656306" இலிருந்து மீள்விக்கப்பட்டது