பக்கம்:மலர் மணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மலர்

தடவிக் கொடுத்தேன் அல்லவா-அந்த நேரத்தில் என் கைக்கு ஏதோ ஒரு பொருள் அருவியதாகவும், பின்னர் அது கீழே விழுந்து விட்டதாகவும் உணர்ந்தேன். ஆல்ை அதனை நன்றாகக் கவனிக்கவில்லை. அந்தப் பொருள் நான் கீழே வைத்திருந்த டைக்குள் விழுந்துவிட்டிருக் கிறது. அதுதான் கற்பகத்தின் கையில் அகப்பட்டு என்னேக் காட்டிக் கொடுத்துவிட்டது-அந்தத் தலே அணியைத்தான் சொல்லுகிறேன். இந்த விவரத்தையும் கற்பகத்திடம் சொன்னேன். மீண்டும் அவள் என்னைக் கேட்டாள் :

“ஏன் அண்ணு, அல்லிக்குத்தான் திருமண ஏற்பாடு முடிந்து விட்டதே. நீ எப்படி அவளை மணக்க முடியும்.”

“அந்த ஏற்பாட்டை முறித்துவிட்டு நான் மணந்து கொள்வேன்.” .

“அது எப்படி முடியும்?”

என்று கேட்டவளுக்கு, காலேயில் நானும் அப்பாவும் குருசாமி மூலம் செய்துள்ள சூழ்ச்சியை எடுத்துச் சொன்னேன். அவள் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டுக்கொண்டிருந்தாள். பழிக்குப் பழி வாங்கியது போன்ற ஒரு மன நிறைவு அவ்ஸ் குறிப்பில் காணப் பட்டது. இருப்பினும், அவள் உள்ளத்துக்குள்ளே ஏதோ ஏமாற்றம்-ஏக்கம் இருப்பதாக அவள் முகம் சொல்லிற்று. அகத்தின் அழகுதான் முகத்தில் தெரியுமே. அதை யறிந்துகொள்வதற்காக கான் கிண்டிக் கிளறத் தொடங்கினேன். -

‘ஏன் கற்பகம் ! அந்தப் போலீசு மாப்பிள்ளை பாண்டியன அப்பா முதலில் உனக்கு ஏற்பாடு செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/66&oldid=656309" இலிருந்து மீள்விக்கப்பட்டது