பக்கம்:மலர் மணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d6 மலர்

மனைவிமார்களுக்கு ஊரிலே இருந்து வந்த செல்வாக்கை கான் சிறுபோதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அதல்ைதான், விளையாட்டுக்காக யார் கேட்டாலும், போலீசு இன்சுபெக்டரைத்தான் நான் கட்டிக்கொள் வேன் என்று சொல்லி வந்தேன். என் விருப்பம் பலிக்கப் போவதை எண்ணி உள்ளத்திலே பூரிப்புதான். ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டு, காஃபியை எடுத்துக் கொண்டுபோய் மாப்பிள்ளை கையில் கொடுத் தேன். அவர் என்ன நன்றாகக் கவனித்தார். நானும் பார்த்தேன்தான். பிறகு நடந்ததை யெல்லாந்தான் நீ தெரிந்துகொண் டிருக்கிருயே.”

“கவலைப்படாதே கற்பகம்! நல்ல இடமாகப் பார்த்து நான் உன்னேக் கட்டிக் கொடுக்கிறேன்.”

கட்டிக் கொடுப்பதா? எனக்கு இனி திருமணமே வேண்டாம் அண்ணு முதல் கோணல் முற்றுங் கோணல் என்றபடி, எப்பொழுது முதலில் தவறிப்போய் விட்டதோ அப்பொழுதே நான் இந்த முடிவுக்கு வந்து விட்டேன்.” -

“ அப்படி சொல்வதற்கில்லே கற்பகம் ! ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றகும்-அன்றி அது வரினும் வந்த்ெய்தும்-ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் என்பார்களே. பொறுத்திருந்து பார்ப் போம், முயற்சி செய்வோம்-அதற்குள் மனத்தைச் சோர விட்டுவிடாதே.” - . +

“அது எனனவோ அண்!ை எனக்கு ஒன்றும் திரு மணமே வேண்டாம். நீ செய்துகொண்டால் அதுவே எனக்குப் போதும்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/68&oldid=656311" இலிருந்து மீள்விக்கப்பட்டது