பக்கம்:மலர் மணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 73

ஒருவர் சாகத் துணிகிறர் என்றால், அவர் வீரராகத்தர்ன் இருக்க வேண்டும். எந்தக் கோணத்தில் நின்று பார்த் தாலும், தற்கொலை செய்து கொள்பவர்கள் தைரியம் உடையவர்களாகவே எனக்குப் படுகிறார்கள். அது சின்ன காரியம் அன்று. இந்த அற்பப் பிச்சைக்கார வாழ்வின்மேல் அவாக் கொண்டு, மானம் போவதாக இருப்பினும், உயிரை வெல்லக்கட்டியாக மதித்து அதை விடத் துணியாது, குறிக்கோளைக் கைவிடுவதே

கோழைத்தனம்-என்பது என் தாழ்மையான கருத்து அத்தான். மனத்தில் வரித்த மணவாளகின விட்டு, மற்றாெருவனே மணந்து கொள்ளும் அளவிற்கு மானங் கெட்டவளா நான் ? மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னர், உயிர் நீப்பர் மானம் வரின் என்பது பொய்யா மொழியாயிற்றே. நானும் பத்தாவதுவரை படித்திருக் கிறேன். அத்தான். ‘

“ நீ சொல்லுகிறபடி பார்த்தால், உலகத்திலே ஒருவருமே உயிர் வாழ முடியாது எல்லோரும் இறந்து போக வேண்டியதுதான். யாருக்குத்தான் நினைத்த காரியமெல்லாம் நிறைவேறி விடுகின்றன? யாருக்குத் தான் குறிக்கோள்கள் எல்லாம் கூடிவந்து விடுகின்றன? யாருக்குத்தான் வாழ்க்கையிலே கடலனய - மலை யொத்த துன்பங்கள்-தொல்லைகள் தோன்ற வில்லை ? யாருக்குத்தான் ஒவ்வொரு கேரத்தில் மானம் போகக் கூடிய அளவுக்கு நெருக்கடி நேரவில்லை? ஒவ்வொருவரும் தற்கொலை செய்துகொண்டு ஒழிந்து போக வேண்டியது தானு? முன்னர் தோல்விமேல் தோல்வி கண்டவர் பலர், பின்னர் வெற்றிமேல் வெற்றிபல பெற்று வீறுடன் வாழ்ந்த வரலாறுகள் உனது பத்தாவது படிப்பில் வரவில்லேபோலும் பைத்தியமே! ஒழிந்து போவதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/75&oldid=656319" இலிருந்து மீள்விக்கப்பட்டது