பக்கம்:மலர் மணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.82 மலர்

வென்றவர் தோற்றவரைக் கட்டித் தழுவிக்கொண்டு ஆறுதல் செய்வது மரபு. அந்த வழக்கப்படி மாமாவைத் தழுவிக்கொள்ளுமாறு பலரும் அப்பாவைத் தூண்டி ர்ைகள். பழைய பகையை எண்ணி அப்பா தயங்கினர். நான் விடவில்லை; அப்பா கையைப் பிடித்து இழுத்த படியே மாமரவிடம் இட்டுச் சென்றேன். இந்தச் சடங்கை ஏற்றுக்கொள்ள விரும்பாதவராய் அப்பொழுதே மாமா அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார் ; ஊர் நோக்கி கடந்துகொண்டிருந்தார். இனி அப்பாதான் நாட் டாண்மைக்காரர். -

அடுத்து, புது நாட்டாண்மைக்காரர் தலைமையில் கேளிக்கைகள் ஆரம்பமாகின. பலவகை ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன. சிலம்பம், மற்போர், வாட்போர், கோழிச் சண்டை, ஆட்டுக்கடா சண்டை முதலியன முறையே நடந்தன. -

இறுதியாக, அனைவரும் ஊர் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டார்கள். இப்பொழுது ஊர்வலத்தின் தலைவர் அப்பாதான். புது நாட்டாண்மைக்காரரை ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பிக்கவேண்டுமல்லவா ?

இருட்டுகிற சமயமாதலால், விளக்குகள் ஏராளமாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன! ஆடம்பரமாகவும் ஆர வாரத்துடனும் ஊர்வலம் சென்றது. வழி நெடுக, காலை யில் போலவே எல்லா இயங்களும் முழங்கின. எல்லாக் கேளிக்கைகளும் நடந்தன.

ஊர்வலம் ஊரையடைந்தது; வலமாக நான்கு தெருக் களையும் சுற்றி வந்தது. மக்கள் காலையில் ஒவ்வொருவ ராக வீட்டிலிருந்து வந்ததைப் போலவே, இப்பொழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/84&oldid=656329" இலிருந்து மீள்விக்கப்பட்டது