பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுரர் அப்பன் 8碟 மேலும், இச்சிற்றாற்றங்கரையான் தேவர்கட்கும் புகலிடமாக இருப்பவன்; மிடுக்கான அசுரர்கட்குக் கூற்தைச் யொப்பவன் "புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர்வன் கையர்வெம் கூற்றை’’’ (புகர் - ஒளி, கூற்று - யமன்) என்பது பாசுரப்பகுதி. இத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமானைத் தவிர தனக்கு வேறு துணை இல்லை என்கின்றார் ஆழ்வார். "செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் நூர்த்திருச் சிற்றாறு அங்குஅமர் கின்றஆதியான் அல்லால் யாவர்மற்று என்அமர் துணையே’** |கயல் - ஒருவகை மீன்; உகளும் - துள்ளுகின்ற; தேம்பணை - தேன் நிறைந்த மருத நிலம்: புடை-பக்கம்: ஆதியான் - காரணப் பொருளானவன்.) என்பது ஆழ்வார் திருவாக்கு. & மேலும் இதனை மெய்ம்மையே நின்ற எம்பெருமான் அடியினை அல்லது ஓர் அரனே...பிறிது இல்லை' என்று வற்புறுத்துகின்றார். அவனுடைய இரண்டு திருவடிகளே யன்றித் தனக்கு வேறு பாதுகாவல் இல்லை என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. மற்ற திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள் அனைவரும் திருச்சிற்றாற்றங்கரை எம். 33, திருவாய் 8.4 : 8. 34. டிெ 8 4 : 2. 35. டிெ 8.4 : 4.