பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தா! எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய், இறைவனே!இவ் வளியிலே பறவையிலே மரத்தினில்ே முகிலினிலே வரம்பில் வான வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம் களியிலே, கோவிந்தா நினைக்கண்டு நின்னொடுநான் கலப்பது என்றோ? என்கண்ணை மறந்துன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின்கண்ணால் புவியெல்லாம் நீஎனவே நான் கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவமெலாம் மறந்து, நெஞ்சில் புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா! எனக்கமுதம் புகட்டு வாயே." 2. பா.க. தோ.பா. கோவிந்தன் பாட்டு-2 3. பா.க. தோ.பா. கோவித்தன் பாட்டு-3