பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 5 2 மலைநாட்டுத் திருப்பதிகள் புகழும் பொருபடை ஏந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான் திகழும் மணிநெடு மாடம்நீடு திருப்புவி பூர்வளமே.”**? (பொருநீர் கடல்-அலை எறியும் கடல்: திப்பட்டு-நெருப் புக்கொளுத்தி, எரி தீக்கொழுந்து: ஆழி-சக்கரம்; பொருபடை போர்செய்யும் ஆயுதங்கள்; பொன்று வித்தான்-அழித்தவன்) என்பது பாசுரம்.கடல் வண்ணனான எம்பெருமான்திருவாழி யாழ்வான் முதலான திவ்வியாயுதங்களை யணிந்து கொண்டு எழுந்தருள்வது ஒரு கடல் நெருப்புக் கொளுத்தி நடந்து செல்லுகின்றதோ?’ என்று ஐயுறும்படியாகவுள்ள தென் கின்றாள் தலைவி. அன்றியும், இந்த எம்பெருமான் திருவாழி திருச்சங்கு முதலிய திவ்வியாயுதங்களுடன் போர்க் களத்தில் சென்று அரக்கர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலும் இடையீடின்றிப் புகழ்ந்து கூறாநின்றாள். இதனாலும் இத்திருப்பதி எம்பெருமானுடன் இவனுக்கு ஒரு சம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றது. என்று குறிப்பாகப் புலப்படுத்துகின்றாள் தோழி. மேலும் தோழி கூறுகின்றாள்; வண்டினம் முரலும் சோலை, மயில் இனம் ஆலும் சோலை, கொண்டல்மீ தணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோன் அமரும் சோலை: என்றெல்லாம் சோலைகளின் வளத்தைப் பேசுகின்றாள்; வயலடங்கலும் கரும்பும் செந் நெலுமாய் வளர்திருக்கும் அழகைச் சொல்லுகின்றாள்; அங்கு உழுவதும் நடுவதுமான பண்ணையில் நடை பெறும் செயல்களின் அழகினையும், சுற்றிலும் நீர்நிலைகள் சூழ்ந் திருக்கும் வனப்பையும் வாய்வெருவுகின்றாள். இங்ங்னம் 30. திருவாய், 8, 9:3 31. திருமாலை-14