பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 181 காலத்தில் பேருந்து வசதிகள் இரா; அந்த இடத்தில் உணவு வசதி, தங்கும் வசதிகள் இருப்பதில்லை. காலமல்லாக் காலத்தில் பேருந்து கிடைத்து ஏறிச்சென்றாலும் திருக் கோயில் திருக்காப்பிடப்பெற்றிருக்கும். திருக்காப்பு நீக்கும் (திறக்கும்) வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கும். சேவை முடிந்து திரும்புங்கால் பேருந்து வசதி இருப்பதில்லை : மாலைக் காலமாக நேர்ந்து விட்டாலோ சொல்ல வேண்டிய தில்லை; இடவசதி, உணவுவசதி முதலியவையின்றி அவதிப் பட வேண்டிவரும். நன்றாக விசாரித்ததில் எர்ணாகுளம் . ஷோரனுார் இருப்புப்பாதையிலுள்ள ஆல்வே நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் செல்ல வேண்டும் என்பதை அறிகின்றோம். ஆல்வே சற்றுப் பெரிய ஊராதவின் அடிக்கடி பேருந்து வசதிகள் கிடைக்கும். எர்ணாகுளத் தினின்றும் சரியாகக் காலை 7 மணிக்குப் புறப்படுகின்றோம்; ஆல்வேயில் இறங்குகின்றோம். இருப்பூர்திவண்டியில் போகும் போதும் பேருந்தில் செல்லும் போதும் இருபுறமுள்ள சோலைகள், நெல் வயல்கள், கமுகு - தென்னந் தோப்புகள் முதலிய இயற்கை வனப்புகளை எல்லாம் கண்டுகளித்த வண்ணம் செல்லுகின்றோம். அழகு கூடு ஆரிக்கும் மூழிக் களத்தின் வழியெல்லாம் அழகின் காட்சிகள்தாம். பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு” என்ற நூலிலுள்ள கவிதைகளின் காட்சிகள் யாவும் நம் நினைவிற்கு வருகின்றன. இந்தப் பகுதிகட்கு வந்துதான் அவர் அந்தக் கவிதைகளைப் பாடினரோ என்று கூட எண்ணுகின்றோம். எண்ணற்ற உயிர்கட்கு எல்லையற்ற இன்பங்களைப் படைத்துப் புரந்து இன்புறும் அலகிலா விளையாட்டுடை ஆண்டவனின் பெருங் கருணைத் திறத்தினை எண்ணி எண்ணி வியந்து நிற்கின்றோம். இந்நிலையில்,