பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82 மலைநாட்டுத் திருப்பதிகள் “எத்தனைகோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா!' என்ற பாரதியாரின் வாக்கும் நம் நினைவுக்கு வருகின்றது. அதை நினைந்தவுடன் தொடர்ந்து, 'சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு சேரும்ஐம் பூதத்து வியன் உலகு அமைத்தாய் அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பல நல் x அழகுகள் அமைத்தாய்' என்ற அடிகளும் தொடர்ந்து நம் மனத்தில் குமிழியிட்டு எழுகின்றன. சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று தத்துவங்களும் இயைந்து நிற்கும் அதிசயம் நம் கருத்தினைக் கவர்கின்றது. சித்தாகிய உயிரை அசித்தாகிய உடம்புடன் இணையச்செய்து அந்த உயிரை இயக்கும் இறைவனின் செயலையும், அந்த உயிர்கள் கைபுனைந்து இயற்றி அசித்தினைப் பயன்படுத்தி எத்தனையோ கோலங்கள் புனைந்து தமக்கு வேண்டிய விதவிதமான வசதிகளை யெல்லாம் அமைத்து இந்த உலகினைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனுக்கும் ஏற்ற வண்ணக் களஞ்சியமாக ஆக்கிக் கொள்ளும் அற்புதத் திறனையும் வியந்து போற் று கி ன் றே ம் . ‘விசிட்டாத்துவைத தத்துவத்தை விளக்கி நிற்கும் கவிதையை நன்கு சுவைத்து மகிழ்கின்றோம். இம் மனநிலையில் ஆல்வேயை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம். 10. பாரதியார் கவிதைகள் - இறைவா இறைவா 11. பாரதியார் - டிெ