பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுழிக்களத்து விளக்கு #83 ஆல்வேயிலிருந்து சுமார் பத்துக்கல் தொலைவிலுள்ளது திருமூழிக்களம், சாலையின்மீதே ஊர் அமைந்துளளது. பேருந்தினின்றும் இறங்கினவுடன் கால் ஃபர்லாங்கு தூரம் நடந்து திருக்கோயிலை அடைகின்றோம். நம்மாழ்வாருடன் திருக்காட்கரை அப்பனின் சீலகுணத்தில் ஈடுபட்டு அதில் ஆழங்கால் பட்டோம் அல்லவா? அங்ங்னம் நம்மாழ்வார் ஆழங்கால் பட்டவுடன் அப்பெருமானை நேரில்கான ஆசைப் பட்டுப் பிராட்டியின் நிலையிலிருந்து பராங்குச நாயகியாகத் தூதுவிட்டது நம் நினைவிற்கு வருகின்றது. நாரை, குருகுச் கொக்கு ஆகிய பறவை இனங்களையும் வண்டு, தும்பி ஆகிய பூச்சி இனங்களையும் மேகத்தையும் அவர் தூது விட்டதை நினைந்து பார்க்கின்றோம். எம்பெருமானின் அழகையும் குணங்களையும் பற்றாசாகக் கொண்டு அவன்பால் துரது விட்டதையும், அதுவும் தாமான தன்மையைவிட்டுப் பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பராங்குச நாயகியாகத் துரது அனுப்பியதையும் சிந்திக்கின்றோம். இந்நிலை அவருக்குத் தானாக வந்து சேர்கின்றது; அதில் அவர் பரவசப்பட்டுக் கிடக்கின்றார். புருடோத்தமனான எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கலும் பெண்தன்மையாக இரு ப் ப ைத யு ம் சீவான்மாவுக்குப் பாரதந்திரியமே (எம்பெருமான் வயத்திலிருத்தலே) வடிவாக இருப்பதையும் எண்ணுகின்றோம். வைணவ சமயப்படி ஆசாரியர்களே பறவைகளாகக் கருதப்படுகின்றனர் என்பது ஈண்டுக் கருதத்தக்கது. இனி ஆழ்வார் தூது விட்டதை நினைவு கூர்வோம். தன்னுடைய சோலையில் இரைதேடித் திரியும் நாரையைத் துனது போகுமாறு வேண்டுகின்றாள் பராங்குச காயகி. 12. ஆசா. ஹிரு (50-155)