பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 மலைநாட்டுத் திருப்பதிகள் "செங்கால மடநாராய்! திருமுழிக் களத்துவறையும் கொங்குஆர்பூந் துழாய்முடிஎம் குடக்கூத்தர்க்கு என்து தாய் தும்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ துமரோடே' [கொங்கு - தேன்; கெழு மீரோ - சேர்க்கிறீர்களா.) என்று வேண்டுகின்றாள். திருவிருத்தத்தில் தாது அனுப்பு வதற்கு வண்டுகளை அழைக்கும்பொழுதே,

  • எம்மீசர் விண்னோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே'

என்று கூறினாரல்லவா? எம்பெருமானுடைய திருவடி வினையின்கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாய்க் கொண்டதை அங்கு நன்கு காட்டியருளினார். அப்படிப்பட்ட ஆசாரியர்கள் தம் சுற்றத்துடன் தம் தலையின்மீது திருவடிகளை வைப்பதே பெறற்கரிய பேறு என்பதை துாது பற்றிய இத்திருவாய் மொழியில் அருளிச் செய்கின்றார். செங்கால மடநாராய்!” என்று கால்களைச் சிறப்பித்துச் சொல்லுவதால் ஆசாரியன் திருவடிகளே தஞ்சம் என்ற தொனிப் பொருளைப் புலப் படுத்துவதாகக் கொள்ளலாம். எம்பெருமான் தனது அடி யார் குழாங்களுடன் திருமூழிக்களத்தில் கலந்து பரிமாறிக் கொண்டிருக்கும் நிலை யில் ஒருக்கால் தன்னை (பராங்குச நாயகியை) மறந்திருத்தல் கூடும். அஃதன்றித் தன்னைப் புறக்கணிப்பதற்குக் காரண மில்லை. அந்நிலையிலிருக்கும் அவரைப் பார்த்துச் செய்தி 13. திருவாய் 9.7 : ! 14. திருவிருத்தம்,:54,