பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விள்க்கு 185 சொல்ல வேண்டும் என்று குறுகினங்களை வேண்டுகின்றாள் ஆழ்வார் நாயகி 'நூமரோடும் பிரியாதே நீரும்தும் சேவலுமாய் அமர்காதல் குருகினங்காள்! அணிமூழிக் களத்துஉறையும் எமராலும் பழிப்புண்டு இங்கென்? தம்மால் இழிப்புண்டு தமரோடு அங்கு உறைவார்க்குத் தத்கிலமே கேளிரே!’** (துமர்-உம்சுற்றத்தார்; சேவல்-(ஆண்) குருகு, எமர். எம் உறவினர்; தமர்-அவருடைய உறவினர்; உறைவார்.வசிப் பார்; தக்கிலம்-தகுதியுடையோம்.) என்ற பாசுரத்தின் மூலமாக. எம்பெருமான் உகந்த அடியார் குழுக்களுடன் தானும் வந்து அடிமை செய்வதற்குத் தகுதி யில்லையா என்று கேட்குமாறு நாரையின் ஒரு பிரிவாகிய குருகினங்களைப் பணிக்கின்றாள். “அவன் தன் அடியார் களுடன் கூடிக் குலவுவது போல் நீங்களும் உங்கள் உறவினருடன் கூடி வாழ்கின்றீர்கள். அவன் இருக்கும் நிலை உங்கள் திறத்தில் பவித்துள்ளது. அங்ஙனமே என்திறத்திலும் பலிக்க வேண்டாவோ?’ என்கின்றாள். எம்பெருமான் அடியார்களுடன் கூடி வாழ்வது போலவும், குருகு தன் இனத்துடன் கூடி வாழ்வதுபோலவும், தானும் தன் காதல னாகிய எம்பெருமானுடன் வாழும்படி செய்ய வேண்டாமா என்பது குறிப்பு. குறைவாளர் காரியம் குறைவற்றார்க்குத் தீர்க்க வேண்டாவோ? உண்டார்க்குப் பட்டினி கிடந்தார் பசி பரிஹக்க பிராப்தமிறே' என்பது ஈடு. 15. திருவாய் 9:72 15. பரிஹரித்த்ல் - நீக்கல்; பிராப்தமிறே. கடமையல் லவா?