பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 மலைநாட் டுத் திருப்பதிகள் அ டு த் து, கொக்கினங்களையும் குருகினங்களையும் வேண்டுகின்றாள் பராங்குச நாயகி, எம்பெருமானிடம் இரண்டில் ஒன்று கேட்டுவந்து சொல்லுமாறு குறிப்பிடு கின்றாள். பாசுரம் இது: 'தக்கிலமே கேளீர்கள்; தடம்புனல்வாய் இரைதேரும் கொக்கினங்காள்! குருகினங்காள்! குளிர்மூழிக் களத்து உறையும் செக்கமலத்து அலர்போலும் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்து இலைபோலும் திருமேனி அடிகளுக்கே’’’ (குருகு- கொக்கில் ஒரு பிரிவு (கொய்யடி நாரை); கமலம்-தாமரை, திருமேனி அடிகள்-எம்பெருமான்.) இந்தப் பதிகத்தின் உயிரான பாட்டு இது. தம்மை அடைந்த அடியார்களுடன் உண்டான சேர்க்கையின் இனிமையால் பிரிந்தார்க்கு உயிர் தரிக்க வொண்ணாத படியிருக்கும் தம் முடைய வடிவழகை மறந்து தன்னை நினையா திருத்தல் கூடும் என்பது அவளது உட்கிடக்கை. இவ்வடிவழகைப் பிரிந்தார் எங்ங்ணம் உயிர்தரிப்பர் என்பதனை அறிவித்து விட்டால் உடனே புறப்பட்டு வந்து விடுவார் என்பதாகக் கருதுகின்றாள். எனவே, அவரது வடிவழகை அப்பறவை கட்குக் குறிப்பிடுகின்றாள். அவருடைய உறுப்புகளெல்லாம செந்தாமரைபோல் இருப்பதால், அவருடைய திருமேனி தாமரையின் இலைபோல் உள் ளது என்கின்றாள். தாமான தன்மையில் எம்பெருமானுககும் தடாகத்திற்கும். ஒற்றுமை காட்டி அவனை வாசத்தடம்' என்று கூறினவரன்றோ? ஆழ்வார் எம்பெருமானை முதன் முதலாகக் காண்பவர்க 17. திருவாய் 9 : : 3 18. டிெ 8 : 5: 1