பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 187 ளோடு அவருடைய திருக்கண்கள் முதலுறவு பண்ணும்; அத் திருக்கண்ணோக்குக்குத் தோற்றவர்களை அவருடைய திருக்கைகள் சேர்த்து அனைத்துக் கொள்ளும்: கைகள் அணைக்குங்கால் அந்த ஊற்றின் பத்திற்குத் தோற்றார் அவருடைய திருவடிகளில் விழுவர்; திருவடிகளில் விழுந் சிாரை நல்ல சொற்களை நல்கி அவர்களைத் தரிப்பிககும் அவனுடைய புன்சிரிப்பு:இங்ஙனம் உறுப்புகளின் வனப்பையும் வடிவழகைரிம் காட்டி அடிமை கொண்டார் அவர். அவ்வடி வழகிற்குத் தோ ற் று ப் பசலையைத் தரித்திருப்பார் அவருக்குத் தகாதவரோ என்று கேட்குமாறு பணிக் கின்றாள், ஆழ்வார் நாயகி.

  • தக்கிலமே கேளீர்கள்’ என்பதற்கு நம்பிள்ளை ஈடு: 'நாம் ஒன்றிலே துணியும்படி கேட்டுப் போருங்கள். அவர் இன்னும் இது வேணு மென்றிருந்தாராகில் பிராணன்களை வருந்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும், வேண்டா மென்றி ருந்தாராகில் நாமும் ஒன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டு விடுங்கோள்' என்பதாக அவர் இன்னும் 'இவள் வேண்டும் என்று இருந்தாராகில் பின்னின சடையினாலும் தூக்கிலிட்டுக் கொள்ளத் துணிந்த பிராட்டியைப்போல் ஏதாவதொரு வழியில் துணிவதாக உறுதி கொண்டு விருப்பம் உண்டா? இல்லையா? இந்த இரண்டில் ஒன்று அறுதியிட்டுக் கேட்டுவரும்படி வேண்டுகின்றாள்.

மேலும் தூது செல்ல ஆயத்தமாக உள்ள குருகுக் கூட்டத்திலுள்ள ஓர் இளங்குருகினை விளித்து இவ்வாறு பேசு கின்றாள்: 'பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக் கையார்க்கு ஏந்துநீர் இளம்குருகே! திருமுழிக் களத்தார்க்(கு)