பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 மலைநாட்டுத் திருப்பதிகள் ஏத்துபூண் முலைபயந்து என்இணைமலர்க்கண் நீர்ததும்ப தாம் தம்மைக் கொண்டு) அகல்தல் தகவுஅன்று என்று உரையிரே' {தகவு-தகுதி ! எம்பெருமானுடைய வடிவழகு நினைக்கநினைக்க ஆழ்வாரை உகுக்கிவிடுகின்றது என்பது இப்பாடலில் தெரிவிக்கப்படு கின்றது. 'அன்னார் திருமுடியிலே திருத்துழாய் மாவை சாத்திக் கொண்டிருக்கும் அழகு ஒன்று மட்டிலும் போதுமே; அதற்குமேல் கையும் திருவாழியும் ஆன அழகு சுடராழியும் பல்லாண்டு' என்று ஆலத்தி வழிக்க வேண்டும்படியன்றோ உள்ளது? இவ்வழகுகளை நினைத்ததனாலன்றோ நான் பசலை நிறம் அடைந்தும் கண்ணிர்சோர்ந்தும் நிற்கின்றேன் இந்நிலையை அவருக்குப் புலப்படுத்துங்கள்’’ என்று தெரிவிக் கின்றாள் பராங்குகநாயகி எம்பெருமான் என்னை விட்டுப் பிரிந்து போகும்பொழுது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்துவிட்டன்றோ போயிருக்க வேண்டும்? அந்தத் திரு மேனியையும் கொண்டு அகன்றாரே. தமக்கு உரிமைப்பட்ட பொருளை விட்டு விட்டுப் பிறர்க்கு உரிமைப்பட்ட பொருளைக் கொண்டுபோவது நியாயமா? பக்தர்கட் கல்லவா அவர் உடம்பு இருப்பது?’ என்று உரைக்குமாறு பணிக்கின்றாள். "இங்ங்ணம் செய்தது தகுதியன்று' என்று தெரிவிக்குமாறும் வேண்டுகின்றாள். தமக்கு உரிமைபட்ட பொருள் என்பதை 'தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே' என்று மூதலித்தவரன்றோ’’ இவர்? 19. திருவாய் 9, 7 9 20. பெரியாழ் - திருப்பல்-1 21. திருவாய் 2, 9 : 4 22. மூதலித்தல்.மெய்ப்பித்தல்