பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 189 இந்நிலையில் வானத்தில் உலாப் போகும் சில மேகங் களைக் காண்கின்றாள் ஆழ்வார்நாயகி, உடனே அவற்றைத் துரது போகுமாறு வேண்டுகின்றாள். 'திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடுதுதாய் திருமூழிக் களம் என்னும் செழுநகர்வாய் அளிமுகில்காள்! திருமேனி அவட்கு அருளிர் என்றக்கால் உம்மைத்தன் திருமேனி ஒளிஅகற்றித் தெளிவிசும்பு கடியுமே?’** (திருமேனி அடிகள் - எம்பெருமான்; கடியுமே-தண்டிப் பரோ) வடிவழகையே அடையாளமாகக் கொண்டு விளங்கும் எம் பெருமானுக்குத் திருமேனி அடிகள்’ என்று ஒரு திருநாமம் சாத்துகின்றாள் பராங்குசநாயகி. வடிவழகினால் ஆன் மாக்களனைத்தையும் தோற்பித்து அடிமை கொள்பவருக்கு இது பொருத்தமான பெயரன்றோ? எதிரிகளையும் அவ்வடிவம் கவரும் அல்லவா? கண்ணன் துரதுபோகுங்கால் அவனுக்கு அவையில் எவரும் மரியாதை செலுத்தலாகாது என்று ஆணையிட்டிருந்தான் துரியோதனன். கண்ணபிரான் ஆங்கு எழுந்தருளுங்கால் அவையிலிருந்த அரசர்களனைவரும் கண்ணனின் சோதி வடிவு தொண்டு பரவசராய் எழுந்து மரியாதை செலுத்தினர். துரியோதனனும் துடை நடுகிங் எழுந்து விட்டு உடனே தன் உறுதி தடுமாறியதற்கு வருந்தி 'என்னே இத்திருமேனி அழகு!’ என்று கண்ணனை உற்று நோக்கினனாம்.இதனைப் பெரியாழ்வார் குறிப்பிடுகின்றா..”* அப்படிப்பட்ட திருமேனியை இழந்து உங்கள் காலில் 23. திருவாய் 9, 1 : 4 24, பெரியாழ் திரு 1, 8 : 5