பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருவித்துவக்கோட்டு அம்மான் பயிர்த்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் பெரும்பாலும் பயிர்த்தலையிலேயே சிறுகுடில் அமைத்து அதில் குடியிருந்து கொண்டு அப்பயிரைத் தம் உயிர் போல் பாதுகாப்பது வழக்கம். இதுதான் உண்மையாக உழவுத் தொழிலில் ஈடு படுபவர்களின் அறிகுறி. இது கருதிதான் வள்ளுவப் பெருத் தகை. “செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்' என்று சொல்லி வைத்தனர் போலும், உழவுத்தொழிலே பெரும்பான்மையாக நடைபெறும் நம் நாட்டில் பொதுவாக உழவர்கள் நிலத்தின் தலைமாட்டிலேயே குடிலை அமைத்துக்கொண்டு வாழ்வதைக் காணலாமாயினும், மலை நாட்டில் (மலையாளத்தில்) இந்நிலையைச் சிறப்பாகக் காணலாம். நீர்வளம், நிலவளம் மிக்க அந்தாட்டின் மக்கள் தொகைக்கேற்ப நிலப்பரப்பு அமையவில்லை. ஒரு சில பெரு நிலக்கிழார்களைத் தவிர, பெரும்பாலோருக்குச் சிறு சிறு பகுதிகளே சொந்த நிலமாக அமைந்துள்ளன. இந்தச் சிறு பகுதியாக உள்ள காணி நிலத்திலே’ தூணில் அழகிய தாய்-தன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் ஒர் மாளிகை’, 1. குறள்-1039 2. பாரதியார் கவிதைகள்-காணி நிலம்-1, 2