பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் #99 'பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் பாக்கு மரங்கள், பனை மரங்கள் முதலியவையும் பல்வேறு வகை பயிர்த் தொழில்களும் நாம் நாடோறும் காணும் காட்சிகள். பெரும் பாலும் வீடுகள் அமையாத நிலங்களைக் காண்டல் அரிது. அவ்வளவு கண்ணுங் கருத்துமாக அங்கு உழவு நடை பெற்று வருகின்றது. இங்ஙனமே திருமகள் கேள்வனான பரமபதநாதன் தனக்கு அடிமை செய்து உய்தற்காகவே பிறந்த ஆன்மாக் களை யெல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொருட்டுப் பெருங்கருணையால் பயிர்த்தலையிலே குடில் அமைத்துக் கொண்டு பயிர்களைப் புரக்கும் உழவனைப் போலவே இந்நில உலகத்தில் 108 திவ்விய தேசங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து ஆன்மாக்களை உய்விக்கின் றான் என்பது வைணவ உலகின் நம்பிக்கை. இங்ங்ணம் ஆன்மப் பயிர்களைப் புரக்கும் எம்பெருமானுக்குப் பக்தி உழவன் என்று திருநாமம் இட்டு மகிழ்வர் பக்திசாரர் என்ற திருமழிசைப் பிரான். 'வித்தும் இடவேண்டும் கொல்லோ விடைஅடர்த்த பத்தி உழவன் பழம் புனத்து (விடை - காளை, அடர்த்த - அடக்கின.1 き* & என்று கூறுவதைக் காண்மின். இந்த 108 திருப்பதிகளும் மலை நாட்டிலுள்ளவை மட்டிலும் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று திவ்விய தேசங்களும் நீர்வளம் நிலவளம் நிறைந்த இடங்களில் அமைந்து மாயோன்மேய காடுறை 3, நான் திருவந் 27