பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மலைநாட்டுத் திருப்பதிகள் உலகமாகத்" திகழ்கின்றன. திருத்தலலப் பயணம் செய்யும் பக்தர்கள் இந்தத் தனிச் சிறப்பை நன்கு அறிவர். இங்ங்னம் 108 திவ்விய தேசங்களிலும் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான்களுள் மூவர் பேரில் மிகவும் ஈடுபட்டு மங்களாசாசனம் செய்துள்ளார் கோழிக்கோன் குலசேகரப் பெருமாள். திருவரங்கம் பெரிய கோயிலில் அரவணையில் பள்ளி கொண்டுள்ள அழகிய மணவாளன் பேரில் மால் கொண்டு பாடியவை முதல் மூன்று திருமொழிகள்; வண்டி னங்கள் பண்பாடும் வேங்கடத்து நெடியோன் பேரில் அருளியது. நான்காவது திருமொழி; மீன் நோக்கு நீள்வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மான்மீது திருவாய் மலர்ந் தருளியது ஐந்தாவது திருமொழி. மூன்றாவதாக குறிப் பிட்ட வித்துவக்கோடு என்ற திவ்விய தேசம் மலை நாட்டி லுள்ளது. இதனை திருமிற்றக்கோடு என்று வழங்குவர் அப்பகுதி மக்கள். தென்னிந்திய இருப்பூர்தி வழியின் ஷோரனூர் சந்திப்பிலிருந்து இவ்வூருக்கு எளிதாகப் போக லாம். ஷோரனூர்.குருவாயூர் நெடுஞ்சாலையில் ஷோரனூரி லிருந்து இவளுர் பத்துக்கல் தொலைவிலுள்ளது; அடிக்கடி பேருந்து வசதி உண்டு.ஐம்பது காசு தந்து இவ்வூரை அடைய லாம். சாலையின் மேலேயே இவ்வூர் அமைந்துள்ளது. பேருத்தில் செல்பவர்கள் திருமலைப் பேருந்துப் பயணிகள் கொண்டை ஊசி வளைவுப்பாதையில் செல்லும் போது மலையின் இயற்கைக் காட்சிகளை நுகர்ந்தவண்ணம் செல்வ தைப் போலவே, ஷோரனுTருக்கும் வித்துவக் கோட்டிற்கும் இடையிலுள்ள ஒரு பெருங்குன்றினை இத்தகைய வளைவுப் பாதையைக் கடந்து செல்லுங்கால் மலையின் இயற்கைக் காட்சியில் தோய்ந்த வண்ணம் செல்லலாம். எங்கோ பிறந்து வளர்ந்த பாரதப் புழா என்ற ஆறு வளைந்து வளைந்து சென்று வித்துவக் கோட்டு அம்மானை நாடி அவன் திருவடி சளை வருடிச் செல்லும் அற்புதக் காட்சியினைக் கண்டு Tதொல். பொருள் - அகத்-நூற்பா, 5