பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருவித்துவக்கோட்டு அம்மான் 20; ருவித்து களிக்கலாம்: நாம் மலைப்பாதையில் வளைந்து வளைந்து செல்லும் போதெல்லாம் வளைந்து வளைந்து செல்லும் ஆற்றையும் பலமுறை கண்டு அநுபவிக்கலாம். இங்ங்ணம் போய்க் கொண்டிருக்கும்போது, 'தெளிது.ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து எளிது.ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது.ஆகத் தாய்நாடு கன்றேபோல் தண்துழா யான்அடிக்கே போய்நாடிக் கொள்ளும் புரிந்து’’’ (செந்நிறீஇ-செல்வனே நிறுத்தி; ஞானம்-பகவத் விஷய பக்தி; சிந்தை-மனம்; புரிந்து-விரும்பி.) என்ற பொய்கை யாழ்வாரின் வாக்கு பண்பட்ட நம் உள்ளத் தில் குமிழியிட்டு எழலாம். பல்லாயிரம் பசுத்திரளினுள் ஒரு சிறிய கன்று தன் தாயைக் கண்டறிந்து ஆவலுடன் அதனை அடைவது போலவே, பரமான்மா-சீவான்மா உறவை நன் கறிந்த நம்மனம் பதறிக்கொண்டு அவ்வெம்பெருமானையே எண்ணிய வண்ணம் மிக்க ஆவலுடன் செல்லும் உணர்ச்சி யைப் பெறுவதைக் காணலாம். அல்லது, இன்னொரு வழியா சிவும் இவ்வூரை அடையலாம். ஷோரனுார்.கோழிக்கோடு இருப்புப்பாதையிலுள்ள பட்டாம்பி என்ற நிலையத்தில் (ஷோரனூரிலிருந்து மூன்றாவது நிலையம்) இறங்கி, ஆற்றில் வெள்ளம் இருப்பின், படகின்மூலம் அதனைக் கடந்து கோயிலின் அருகிலேயே இறங்கலாம். ஷோரனூரிலிருந்து பேருந்தில் செல்லும் நாம் வித்துவக் கோடு என்ற ஊரில் குறிப்பிட்ட இடத்தில் இறங்குகின்றோம். இடப்புறமாக நோக்கினால் (மேல் திசை) கம்பன் 5. முத திருவந்-30