பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2s2 மலைநாட்டுத் திருப்பதிகள் வருணிக்கும் தேரை தாலாட்டும் பண்ணைகளையும் தென்னை, கமுகந் தோப்புகளையும் கண்டுகளிக்கலாம் வலப் புறத்திலும் தோப்புக்களே நிரம்பியுள்ளன. ஆனால் தோப்பு களினூடே ஒரு சிறுசாலை வழியாக நான்கு ஃபர்லாங்கு தொலைவு நடந்து வித்துவக் கோட்டு அம்மான் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலை அடைகின்றோம். கோயில் மிகப் பெரிய கோயில் அன்று; ஒரே ஒரு திருச்சுற்றைக் (பிரகாரம்) கொண்டது. பெரும்பாலும் மலை நாட்டுக் கோயில்களின் அர்த்த மண்டபத்தோடு கட்டியுள்ள கரு அறையின் அமைப்பு வட்டவடிவமாக இருப்பது போலவே, இக் கோயிலின் அமைப்பும் அவ்வடிவிலேயே இருப்பதைக் காண் கின்றோம்; கோயிலின் மேற் கூரை செப்புத் தகட் டினால் வேயப்பெற்றிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழகத்திலுள்ள திருமால் ஆலயங்களில் மேற் கொள்ளப்பெறும் வைணவ சம்பிரதாய முறையில் (பாஞ்சராத்ரம் நல்லது வைகாநஸ முறையில்) வழிபாட்டு முறை அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் பக்தர்கட்குத் தீர்த்தம் சாதிப்பதில்லை; சடகோபன்' சாத்துவதில்லை. சந்தனம், துளபம் இவற்றையே இறைவனு டைய பிரசாதமாக வழங்குகின்றனர். இன்னொரு சிறப்பான கூறு என்னவெனில், கோயிலில் முக்கியமான அர்ச்சகர் போத்தி என வழங்கிம் அந்தணர் ஆவர். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் அர்ச்சகர்கட்கு ஆழ்ந்த சாத்திர ஞானம், ஆகமங்களில் நல்ல பயிற்சி இவை இல்லா திருப்பது போலவே, இங்குள்ள போத்திகளிடமும் இவை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மிகத் தூய்மையாக நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து காணப்பெறுகின்றனர். ஆற்றில் நீராடிய பின்னர் இல்லத் திற்கு ஏகாது ஈர ஆடையுடன் கைங்கரியத்திற்காக நேரே கோயிலுக்கு வருகின்றனர். திருக்கோயில்களில் கைங்கர்யம்