பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 203 செய்யும் எல்லா நிலையினரிடமுந் தூய்மைசிறந்த கூறாகத் திகழ்கின்றது. எல்லோருமே வழிபாட்டுக்காகப் போகும் பக்தர்களிடம் மிக உயர்ந்த பண்பாட்டுடன், நடந்து கொள் கின்றனர். அருக்கன் உதயத்திலிருந்து அன்றைய பகல் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை ஐந்தரை மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் எல்லாக் கோயில்களிலும் தரிசன காலமாக வழக்கத்திலிருந்து வருகின்றது. வேறு நேரங்களில் கோயில் திறக்கப்பெறுவதில்லை, காரணம்’ தலைமை அர்ச்சகராகவுள்ள போத்தி நீராடிய நிலையில் தூய்மையாக இருக்க வேண்டியமையே யாகும் எனக் கருத இடம் உண்டு. நாள் முழுவதும் ஒருவர் இங்கனம் இருக்க முடியாதல்லவா? கேரியிலைப்பற்றிப் பேசிக் கொண்டு எங்கோ போய் விட்டோம், திருக்கோயிலில் கிடந்த கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கும் உய்யவந்த பெருமாளாகிய வித்துவக் கோட்டம்மானைச் சேவிக்கின்றோம். சயனக் கோலத்தில் திகழும் மூர்த்தியுடன் ஆழங்கால் பட்டு விடுகின் றோம். குலசேகரப்பெருமாள் மங்களாசாசனம் செய்த பாசுரங்கள் நம் நினைவிற்கு வருகின்றன. பூரீமந் நாராயணனையன்றித் தமக்கு வேறு சரணமில்லாமையை ஆழ்வார் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வற்புறுத்திக் கூறியுள்ளமையை நினைந்து போற்றுகின்றோம். நம்மையும் அறியாமல் பாசுரங்கள் நம்மிடற்று ஒலியாக வெளி வருகின்றன. தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை; விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே!' (தடாயேல்-களைந்திடாவிடில்; விரை. மணம்.) 6. பெரு. திரு 5 1