பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற ஆழ்வாரின் வாக்காலேயே இறைவனை நாம் விளிக்கின்றோம். எம்பெருமானைத் தாயாகப்பாவித்து நாம் குழந்தை நிலைக்கு வந்து விடுகின்றோம். 'அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழுங்குழவி; அதுவேபோன்று இருந்தேனே' (அரிசினம் - மிக்க சினம்; அகற்றிடினும் - வெறுத்துத் தள்ளினாலும்.) என்று முறையிடுகின்றோம். கோபத்தினால் ஒரு தாய் தான் பெற்ற குழவியை ஒரு சமயம் வெறுத்துத் தள்ளினாலும், தாயின் கருணையையே கருதி குழந்தை அழுது அழுது அவள் கருணைக்குப் பாத்திரமாகின்றது. 'அழுதால் உன்னைப் பெறலாம்' என்றபடி அழுது அடி அடைந்த மணிவாசகரைப் போலவே, கண் லில் நீர் மல்க அழுகின்றோம். இந்நிலையில் பரமான்வுக்கும் சீவான்மாவுக்கும் உள்ள உறவுமுறை தாய்க் கும் சேய்க்கும் உள்ள உறவுமுறை போன்றது என்ற உணர் வில் ஆழ்ந்து நிற்கின்றோம். இந்நிலையில் நம் சிந்தையில் குறுந்தொகைப் பாடல் 'பளிச் என்று ஒளிவிடுகின்றது. தோழியின் கூற்றாக வரும் அப்பாடலின் பகுதி வருமாறு : ஊனத்திற்றும் நவநீர்ச்சேர்ப்ப தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு) அன்னாய்!” என்னும் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினள்என் தோழி தன்னுறு விழுமம் களைஞரோ இலளே’ 7. பெரு. திரு 5:1 . 8. திருவர்.திருச்சதகம், 90 9. ෂNH-397