பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 மலைநாட்டுத் திருப்பதிகள் கொண்டுஆளாய் ஆகிலும் உன்குரைகழலே கூறுவனே' (காதலன் - கணவன்; குரைகழல் - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய திருவடிகள்.) என்று பாடுகின்றோம். உலகில் எத்தனையோ அல்லல்கள் பட்டாலும் அவற்றைத் தீர்ப்பதற்கு உன்னையின்றி வேறு யாறுளர்?’ என்று கூறி அவன் திருவடிகளையே சரணமாகக் கொள்ளுகின்றோம். கணவன் நிலையில் எம்பெருமானையும் மனைவி நிலையில் நம்மையும் வைத்துப் போற்றுகின்றோம். இங்குப் பரமான்மாவின் தலைமை, சீவான்மாவின் அடிமை, சீவான்மா பரமான்மாவுக்கு உரித்தாயிருக்கை, சீவான்மா பரமான்மாவின் கூட்டுறவால் இன்பத்தை அடைதல், பிரி வினால் துன்புறல், சீவான்மா பரமான்மாவைக் கரணங்கள் எல்லாவற்றாலும் அநுபவித்துக் களிப்புறுதல்-போன்ற எண்ண அலைகள் விரைவாக நம் உள்ளத்தில் குமிழியிட்ட வண்ணம் உள்ளதை உணர்கின்றோம். நம்மிடையே அடுத்த உணர்ச்சி தலைக்காட்டத் தொடங்குகின்றது. குடிகளைக் காப்பதற்கென்று மாலை யணிந்துள்ள மன்னன் ஒருவன் குடிமக்களிடம் அருள்நோக்கம் செய்யாது, அவர்கட்கு எப்படிப்பட்ட துன்பங்களை விளை வித்தாலும், குடிமக்கள் அவனுடைய செங்கோவையே எதிர் பார்த்து நிற்கின்றனர். இந்தக் குடிகளின் நிலையில் நாம் நிற்கின்றோம். "தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் - - குடிபோன்று இருந்தேனே' (தார் - மாலை; கோல் - செங்கோல்.) xargaresas: ******************** 10. பெரு, திரு. 5.2 įl. @g 5:3