பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 207 என்ற பாசுரத்தின் மூலம் நீ அருள் நோக்கம் செய்யாவிடி னும் உன்னையன்றி வேறொருவரைச் சரண் அடையேன்” என்று மனங் கரைகின்றோம். எம்பெருமானை அரசன் நிலை யிலும், நம்மைக் குடிகள் நிலையிலும் வைத்து எண்ணி இரட்சய-இரட்சக பாவத்தினையில் திளைக்கின்றோம், இதில், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி’’** என்ற குறள்மணியின் ஒளி வீசுவதைக்கண்டு மகிழ்கின்றோம். நோயாளி ஒருவன் மருத்துவனிடம் வருகின்றான். வாளால் அறுத்தும் சூடு போட்டும் அவனது நோயைப் போக்குகின்றான் மருத்துவன். நோய் நீங்கும் பொருட்டு நோயாளி அச்சிகிச்சைத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுகின்றான். இத்துன்பங்களை விளைவித்த மருத்து வனிடமும் நீங்காத அன்புடையவனாகவே இருக்கின்றான். இங்ங்னமே, துன்பங்களைக் கொடுத்தும் இறைவன் ஆன் மாக்களை உய்விப்பான் என்பது வைணவ சமயக் கொள்கை, இறைவனது கருணை வெள்ளம் துன்ப வடிவிலும் நம்மை வந்தடையும். இறைவனே அனைத்தையும் அருளிக் காப்ப வன் என்ற துணிவு ஏற்பட்ட பின்னர் எல்லாத்துன்பங்களை யும் பொறுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை. இந்த நினைவுடன், "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் 12. குறள் - 542