பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மலைநாட்டுத் திருப்பதிகள் மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ ஆள்ஆ உனதுஅருளே பார்ப்பன் அடியேனே 18 (மாளாத நீங்காத காதல் - அன்பு: ஆள் ஆ(க) . அடிமை உண்டாக; பார்ப்பன் - நோக்கியிரா நின்ேறன்.) என்ற ஆழ்வார் பாசுரத்தை வாய் விட்டுப் பாடுகின்றோம். இதனால் பரமான்மா சீவான்மாவுக்கு நன்மை செய் வதிலேயே ஊன்றியிருப்பதும், சீவான்மா பரமான்மாவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டியிருப்பதும் தெளிவாகின்றன. மாக்கடலில் ஒரு கப்பல் புறப்படுகின்றது. அக்கப்பலின் பாய்மரத்தின்மீது ஒரு பறவை உள்ளது. கப்பல் நடுக் கடலுக்குச் சென்றவுடன் பறவை பறக்கத்தொடங்குகின்றது. நிலத்தினின்றும் கப்பல் மிகச் சேய்மையில் வந்து விட்டதால் பறவையால் மீண்டும் நிலத்திற்குச் செல்ல முடியவில்லை. கடலிலோ பறவை சென்று தங்குவதற்கு ஏற்ற இடமும் இல்லை. ஆகவே, பறவை மீண்டும் கப்பலின் பாம்மரத்திற்கே வந்து சேர்கின்றது. வாழ்க்கைக் கடலில் உள்ள நாமும் இறைவனாகிய கப்பலின் பாய்மரத்திலுள்ள பறவையின் நிலையில்தானே உள்ளோம்? எப்படி எப்படிப் பறந்தாலும் இறுதியில் இறைவனைத் தானே வந்தடைதல் வேண்டும்? "எங்குப்போய் உய்கேன் உன் இணையடியே அடையல் அல்லால் எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே" 13. பெரு. திரு 5 : 4 14. டிெ 5 : 5