பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 2.3% (எறி.(அலை) எறியும்; வங்கம் - மரக்கலம், கூம்பு - பாய் மரம்.) என்ற பாசுரத்தைப் பக்தியுடன் பாடுகின்றோம், மரக்கலத் தின் நிலையில் எம்பெருமானும் பறவையின் நிலையில் நாமும் இருக்கின்றோம். சீவான்மா பரமான்மாவை விட்டு விலகிப் போக முடியாத நிலையையும், பின்னது முன்னதற்கு ஆதாரமாயிருக்கும் நிலையையும் உணர்கின்றோம். கதிரவனைக் கண்டு தாமரை மொட்டுகள் மலர்கின்றன என்பதை நாம் அறிவோம். செந்நிறமுடைய நெருப்பு, தாமரை மொட்டுக்களின் அருகில் வந்து வெப்பத்தைத் தத் தாலும் அந்த வெப்பத்தினால் தாமரை மலர்வதில்லை. நெருப்பின் வெப்பம் தாமரைக்கு ஒத்து வருவதில்லை. கதிரவனின் வெப்பமன்றிப் பிறிதொன்று அது மலர்வதற்குக் காரணமாகாது. அங்ங்னமே, தாம் அநுபவித்தே தீர வேண்டிய கொடிய பாவங்களை இறைவன் தீர்த்தருளா தொழியினும் அவனுடைய எல்லையில்லாத உத்தம குணங் களுக்கேயன்றி வேறொன்றுக்கும் தாம் நெஞ்சுருக முடியாத நிலையைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இந்த உணர்வுடன் தாம், "செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரம்சேர் வெய் கதிரோற்(கு) அல்லால் அலராவால் வெந்துயர்விட் டாவிடினும் வித்துவக்கோட்(டு) அம்மா! உன் அந்தமில்சீர்க்(கு) அல்லால் அகங்குழைய மாட்டேனே' " 15. பெரு. திரு5:6 سس-14 سس