பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 21? என்ற ஆழ்வார் பாசுரத்தை வாய் விட்டுப் பாடுகின்றோம். உலகத்து உயிர்கட்கெல்லாம் பரமான்மாவே வாழ்வின்அடிப் படை என்பதனை அறிந்து கொள்ளுகின்றோம். கோயிலின் அருகில் ஒடும் ஆற்றின் காட்சி நம் மனத்தை விட்டு மறையவில்லை. இந்த ஆறும் இதனைப் போன்ற பல ஆறுகளும் பல இடங்களிலும் பரந்து ஒடி ஆழ்கடலில் சேருமேயன்றி வேறிடத்தே புகுந்து நில்லா. இந்த ஆறுகள் போலவே இறைவனுடைய அநந்த கல்யாண குணங்கள் தவிர மற்றொன்றை நம் மனம் அது மதியாத நிலையை வேண்டி நிற்கின்றோம். இந்த உணர்வுடன், 'தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடித் தொடுகடலே புக்கன்றிப் புலம் நிற்க மாட்டாத மற்றவைபோல் 冰 率 岑 உன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே' (தொக்கு-திரண்டு; தொடுகடல்-ஆழ்கடல்; சீர்-கல் யாண குணங்கள்.) என்ற பாசுரம் நம் வாயினின்றும் வெளிப்படுகின்றது. இதில் பரமான்மாவின் பெருமையும் சீவான்மாவின் சிறுமையும், இறுதியில் சீவான்மா பரமான்மாவை அடைதலும் புலனாகின்றமையை அறிகின்றோம். எம்பெருமானிடத்தில் அன்பைச் செலுத்தி அதனால் செல்வத்தை வெறுக்கின்றவர்களிடம், அவர்களின் நல் வினைப் பயனால் அச்செல்வம் அவர்களை விடாது 17. பெரு. திரு 5 : 8