பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 2 மலைநாட்டுத் திருப்பதிகள் விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. இதனை நாம் அறிந்தாலும் இஃது இறைவனது திருவுள்ளப்படி அமை கின்றது என்பதை நாம் உணராமல் இல்லை. ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமை என்பதை நாம் அறிவோம்.இந்த உடைமையை இறைவன் வெறுத்தொதுக்கினாலும் ஆன் மாக்கள் இறைவனையே பற்றி நிற்கும். இந்த உணர்வு எழும் நிலையில், 'நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையே சேர்திகிரி வித்துவக்கோட் டம்மா! நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே’** |தின் செல்வம் - அதிக செல்வம் திகிரி - சக்கராயுதம்.) என்ற பாசுரத்தை வாய்விட்டுப் பாடி உணர்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றோம். இதில் 'சீவான்மா பரமான்மாவின் உடைமை (ஸ்வஸ்வாமி பாவ சம்பந்தம்) என்ற உண்மை வெளிப்படுவதை அறிகின்றோம். - இந்த உணர்ச்சிப் பெருக்கில் மீண்டும் கோயிலை வலம் வந்து வித்துவக் கோட்டம்மானிடம் பிரியா விடை பெற்று நம் இருப்பிடம் திரும்புகின்றோம். இந்த அரிய பாசுரங்கள் பெருமாள் திருமொழியில் ஐந்தாம் பதிகம் ஆகும். குலசேகர ஆழ்வாருக்குப் பெருமான்' என்ற மற்றொரு திருநாமம் உண்டு என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். இவர் இராமாயணத்தில் மிகவும் ஈடுபாடுடையவர்.