பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 213 'தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் அரசு அமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்னேன் மற்(று) அரசு தானே' என்று கோவிந்த பாதார விந்தத்தைச் சிரமேற்கொள்ளு தலையே கிரீடாபிஷேகமாகப் பாவிக்கின்ற இவர், இராம. பிரானது இன்பதுன்பங்களைத் தம் சுகதுக்கங்களாகக் கருதி' யதனால் இவருக்குப் பெருமாள்' என்ற பெயர் வழங்கிவரு கின்றது." அதனால் இவர் திருமொழி பெருமாள் திரு மொழி என்றே வழங்குகின்றது. சீவான்மா பரமான்மாவின் தொடர்பினைக் கூறும் வித்துவக் கோட்டம்மான் பதிகம் போன்ற ஒரு பதிகத்தை நாலாயிரம் எங்கும் தேடிக் காண்டல் அரிது. இதில் வரும் உவமைகள் பெரும்பாலும் சேர நாட்டு வாழ்க்கையையொட்டியே அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. - இந்த ஒப்புயர்வற்ற திருமொழியை அவர் பாடிய சந்நி தியிலேயே நாமும் பாடி நன்கு அதுபவித்த நிலையில்,

  • வாய்த்த கருமம்இனி

மற்றுஇல்லை நெஞ்சமே! தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுஉண்ட கூத்தன் 19. பெரு. திரு 10 : 7 20. இராமபிரான் திருவரங்கத்தில் நிறுவிய அரங்க நாதன் பெரிய பெருமாள் என்று வழங்கப் பெறு கின்றான். இலக்குவனுக்கு இளைய பெருமாள்” என்ற திருநாமம் உண்டு.