பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரண நம்பி 225. பூமிப்பிராட்டியோ பொறுமையே வடிவெடுத்த வளாயிருப் பவள், நப்பின்னைப்பிராட்டியோ தன் அழகால் எம்பெரு மானை வசீகரித்து நிற்பவள். இம்மூன்று அன்னை மார்களும் அருகிலிருக்கவும் தாம் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யும் வாய்ப்பினை இழக்கலாமோ என்று ஏங்குகின்றார் ஆழ்வார். இங்ங்னம் மூன்று அன்னைமார்களுடன் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருநாவாயை, ‘‘அடியேன் அணுகப்பெறும்நாள் எவைகொலோ?’** (அணுகப்பெறும் - கிட்டப்பெறும்.) என்றும், அந்தத் திருப்பதியில் எம்பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருவோலக்கத்தில், புகலாவதோர் நாளறியேனே’** என்றும், அந்தத் திவ்விய தேசத்தைக், கண்ணாரக் களிக்கின்றது இங்கென்றுகொல் கண்டே?” என்றும் துடித்து நிற்கின்றார் ஆழ்வார். அடைவது அரிய தாக இருக்கும் இடத்திலன்றி எல்லோரும் எளிதில் சென்ற டையும் இடத்தில் எழுந்தருளியிருந்தும் அந்த வாய்ப்பினை இழக்கலாகாது என்பது ஆழ்வாரின் குறிப்பு. தவிர, மண்ணுலகிலுள்ள மனிதர்கள், விண்ணுலகிலுள்ள தேவர் கள். வைகுந்தத்திலுள்ள நித்திய சூரிகள் இவர்கட்குத் தலைவனாக இருக்கும் எம்பெருமானுக்குத் தாம் ஒருவன் மட்டிலும் புறம்புபட்டு நிற்பது தகுதியோ என்ற தொனிப் பொருளையும் இதில் காணலாம். 21. திருவாய் 9.8 : 2 22. ഒു. 9.8 : 3 23. ങു. 9.8 : 5