பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மலைநாட்டுத் திருப்பதிகள் இத்தகைய இறைவனுக்கு இடையறாது கைங்கரியம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றவர் ஆழ்வார். அதற்கு எம்பெருமான் எந்த நாளை எண்ணி வைத்திருக்கின்றனனோ என்று கலங்குகின்றார். 'நாளேல் அறியேன் எனக்குள்ளன. நானும் மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்;’** (மீளா இடையறா.) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. மேலும் அவர், 'தொண்டே உனக்கால் ஒழிந்தேன் துரிசின்றி' " (துரிசு - உள்ளே ஓர் எண்ணம், வெளியே ஓர் எண்ணமு மாக இருப்பது.) என்று தமது கைங்கரிய உறைப்பினை வெளியிடுகின்றார். எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று. என்னதான் பாரித்து நின்றாலும், அவ்வாய்ப்பு அவனது அருளின்றி நிறைவேறப்பெறாது. அந்த அருளை வேண்டு கின்றார் ஆழ்வார். “அருளாது ஒழிவாய்; - அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்ப் புக வைப்பாய்; மருளேயின்றி உன்னைஎன் நெஞ்சத்(து) இருத்தும் தெருளே தரு.தென்திரு நாவாய் என்தேவே!" (அருள் - கருணை; மருள் - மயக்கம் (அஞ்ஞானம்); தெருள் - தெளிவான அறிவு.) 24. திருவாய் 9.8 :4 25. ു. 9.8 : 6 26. டிெ 9.8 8