பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரண்நம்பி 22? இப்பாசுரத்தின் ஈற்றடியிலுள்ள தெருளே தரு என்ப தைத் திருநாவாய்த் தேவனுக்கு அடைமொழியாக்குவர் பிள்ளான் (ஆறாயிரப்படியில்); தரு-தந்தருள்க’ என்று வினைமுற்றாகக் கொண்டு உரைத்தனர் மற்றையுரையா சிரியர்கள். தரு’ என்பதற்கு 'தா' என்ற பொருளைக் கொள்ளுமிடத்து தருக" என்பதன் கடைக் குறையாகக் கொள்ளுதல் வேண்டும். எனவே, அஞ்ஞான வாசனை இல்லாத தொருபடி உன்னுடைய சொருப ரூப குண விபூதி விஷய திவ்விய ஞானத்தை உன் கிருபையாலே எனக்குத் தந்தருளின் நீ, இன்னமும் உன் கிருபையாலே நம் அடியான் இவன் என்று ஆட்கொண்டு அடியேனை உன் பொன்னடிக் கீழ்ப் புகவைத் தருள்வாய் வைத்தருளா தொழிவாய்; திருவுள்ளமான படி செய்தருள்' என்பது பிள்ளானின் ஆறாயிரப்படி அருளிச் செயல். மற்றுமுள்ள ஆசிரியர்கள், 'அருளவுமாம், தவிரவுமாம்; அஞ்ஞானமில்லாதபடி உன்னை என் நெஞ்சிலே நிறுத்தும்படி தெளிவைத் தரவேண்டும்: என்பதாகப் பணிப்பர். தெருளைப் பெற்றவரான ஆழ்வார் அதனைத் தந்தருள வேண்டும் என்று மீண்டும் பிரார்த் திப்பது ஏன் என்ற வினா எழுகின்றது. பெற்றவனுக்கு யாதொரு இடைவெளியில்லாதபடி மேலும் மேலும் அபி விருத்தியைச் செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். 'தனக்கேயாக எனைக் கொள்ளும் சதே' என்ற தெளி வினைத் தரவேண்டும் என்றவரன்றோ இவர்? ஆழ்வார் இப்படிப் பலபடியாக வேண்டியும் எம்பெரு மான் சிறப்பான திருவருள் ஒன்றும் பாவிக்கவில்லை அடியார்களைப் பாதுகாப்பதற்காகவே தேவர்களாலும் முனிவர்களாலும் காண்டற்கு அரியனாயும், மும்மூர்த்தி களிலும் முதல்வனாகவும், மூவுலகங்களையும் தன் சங்கல் பத்தாலேயே ஆட்சி புரியக் கூடியவனான எம்பெருமான் விரும்பியுறையும் இடம் திருநாவாய் என்ற அண்மையி லுள்ள திவ்விய தேசமாக இருந்தும் அதனைக் காண 27. திருவாய் 2.9 : 4