பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233. மலைநாட்டுத் திருப்பதிகள் முடியாமலே தான் முடியப் போவதாகக் கூறுகின்றார் ஆழ்வார். இனி அதனைப் பெற இருக்கின்றவர் யாரோ? என்கிறார்.’’ திருநாவாய்க்குப் போவதில் யாதொரு தடங்கலும் இல்லையே; நேராகப் போய்ச் சேவிக்க இ. என்று சிலர் ஐயுறலாம். திருநாவாய்க்குச் செல்லுதல் ஆழ்வாரின் நோக்கமன்று; அவ்விடத்து உறையும் எம் பெருமானின் நித்திய விபூதியாகிய திருநாடுதான் ஆழ்வார் நோக்கும் நாடாகும். திருநாட்டில் காணக்கடவதான வடிவை எம்பெருமான் இங்கே காட்டுவதாகக் கொண்டு திருநாவாயில் வந்து குடியேறியுள்ளான். அப்படியிருந்தும் அவனைக் கானப் பெறாமையினால் நெஞ்சழிந்து கூப்பிடுகின்றார் ஆழ்வார். "அந்தோ அணுகப்பெறும் நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்(று) அழைப்பன்; கொத்தார் மலர்ச்சோலைகள் சூழ்திரு நாவாய் வந்தே உறைகின்ற எம்மாமணி வண்ணா!' |அணுகப்பெறும் கிட்டப் பெறும்; கொந்துஆர் _ கொத்துக்கள் நிறைந்துள்ள). என்ற பாசுரத்தில் இதனைக் காணலாம். ஒருகால் சொல்லப்புக்கு இதனால் இளைத்தாலும் கைவிடாமல் மேலும் மேலும் எல்லாக் காலத்திலும் துயர் உற்ற பிள்ளை தாய் தந்தையர்களை அம்மா, அம்மா, "அப்பா, அப்பா என்று சொல்லிக் கதறி அழுது கப்பிடுமாப் போலே T23 திருவாய் 9.8 : ) 29. டிெ 9.8 10