பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரணதம்பி 229. ஆழ்வாரும் சிந்தை கலங்கித் திருமாலே, திருமாலே என்று கூப்பிடுவதாக உரைக்கின்றார். இங்கனம் கதறிக் கதறிக் கூப்பிடும் ஆழ்வாரின் உணர்ச்சியுடன் திருநாவாய் வந்தே உறைகின்ற மாமணி வண்ணனைச் சேவிக்கின்றோம்." திருநாவாய் எம்பெருமான்மீது பாடப்பெற்ற திருவாய் மொழியில் கொடியேரிடைக் கோகனத்தவள் கேள்வன், வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்’ என்றும், ‘மடப்பின்னை மணாளா' என்றும், மணாளன் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்' என்றும் பிராட்டியின் சம்பந்தம் அடிக்கடி அதுசத்திக்கப்பெறுகின்றதைக் காண் கின்றோம். அதற்கு தம்பிள்ளை காரணம் அருளிச் செய் கின்றனர்: வேறு தேசத்திற்குச் சென்றிருந்த குழந்தை: ஆர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாறு போன்று, அடையத்தக்க தெளிவிசும்பு அணித்தானவாறே, திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை அதுசந்திக்கின்றார்" என்று.” பத்தாம் பத்தில் முதல் திருவாய்மொழியில் திருமோகூர்க் காளமேகத்தைச் சரணம் அடைந்து ஆழ்வார் பரமபதம் (தெளிவிசும்பு) அடையக் கருதியது ஈண்டு சிந்திக்கத் தக்கது. இங்ங்ணம் பராங்குச நாயகி பெற்ற அநுபவங்களை யெல்லாம் முறையாக எண்ணிய வண்ணம் வீற்றிருந்த திருக்கோலத்தில் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு மலர்மங்கைத் தாயாருடன் சேவை சாதிக்கும் நாவாய் 30. திருவாய் 9.8 : 1) (ஈடு காண்க). 31. டிெ 9.8 : 2 32. ഞു. 9.8 : 4 33. டிெ 9.8 : 5 34. டிெ 9.8 : 4 (ஈடு காண்க)