பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் 5 துன்பத்தைப் போக்கியதாலேற்பட்ட சிரமமோ? அல்லது அன்றே பிறந்து அன்றே வளர்ந்து இப் பூமியைத் தாவி அளந்த சிரமமா? கூறியருள வேண்டும்’ என்று வேண்டு கின்றார் ஆழ்வார். மாடங்களுக்குக் கொடி கட்டி இருப்பதும் ஆழ்வாருக்கு அச்சத்தை விளைவிக்கின்றதென்று நம் பிள்ளை திருவுள்ளம் பற்றி, ‘சத்துருக்கள் கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி (தீங்கிழைக்கும்படி) கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேண்டுமோ? கொடிக்குப் பயப்படவல்லார் இவரைப் போலில்லை; கம்ஸ் பயத்தாலே ஒளிந்து வளர்ந்தாப்போலே இருக்கலாகாதா?’ என்று அருளிச் செய்திருப்பதன் அழகு இன்சுவை மிக்கது. எம்பெருமான் பரமபதத்தில் இருக்கும் நிலையை எண்ணிப் பார்க்கின்றார் ஆழ்வார். பிறரைத் துதிக்கவும் வணங்கவும் வேண்டாத நித்திய சூரிகளின் பரிவுக்கு இலக்காக இருப்பவன் எம்பெருமான்; அவர்கள் எம்பெருமானை எப்பொழுதும் காத்துக் கொண்டு இருப்பர். இந்நிலையில் எம்பெருமான் திருவாழி திருச்சங்கு முதலிய எல்லா ஆயுதங் களையும் தரித்துக் காட்சி கொடுத்தால், அவர்களும் எம்பெருமானுடைய சிரமத்திற்கு அஞ்சி "வாழ்க பல்லாண்டு' என்று மங்களாசாசனம் செய்வர். அஞ்சுவதற்கு நிலமில்லாத திருநாட்டிலேயே எம்பெருமானின் நிலை இப்படியானால், இந்நிலத்தில் சொல்ல வேண்டுமோ என்பது ஆழ்வாரின் நினைப்பு. சீவான்மாக்களின் தாபத்திரயம்’ முதலிய துக்கங்களைப் போக்குவதற்காக எம்பெருமான் அந்த அழகிய வடிவுடன் இந்தச் சம்சார நிலத்தில் வந்து உலவுகின்றானே என்று வயிறு பிடிக்கின்றார் ஆழ்வார். 8. தாபத்திரயம் - மூவகைத் துன்பங்கள்; தன்னைப் பற்றி வருவன, பிற உயிர்களைப்பற்றி வருவன தெய்வத்தைப்பற்றி வருவன என்பவையாகும்,