பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மலைநாட்டுத் திருப்பதிகள் 'பணியா அமரர் பணிவும், பண்பும், தாமேயாம் அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர்காண்மின்; தனியா வெம்நோய் உலகில் தவிர்ப்பான், திருநீல மனியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே' (பணியா வணங்காத; அமரர் - நித்திய சூரிகள்: வெம்நோய் - தாபத்திரயம் முதலியவை; அணிஆர் - அழகிய, நீலமணிமேனி - நீலமணி போன்ற வடிவம்.) மிக்க மிருதுத் தன்மையுடைய அழகிய திருமேனியுடன் எம்பெருமான் திவ்விய ஆயுதங்களைச் சுமந்துகொண்டு இந்த நிலவுலகில் வருவதைக் காணும் ஆழ்வாருடைய மனம் துன்பம் அடைந்து மயங்குகின்றது. இந்நிலவுலகத்தில் எம்பெருமானின் நிலையையும் எண்ணிப் பார்க்கின்றார் ஆழ்வார். எம்பெருமான் ஒருவரை யும் ஆளாக வைத்துக் கொள்ளவில்லை; தாமே திருவாழியையும் திருச்சங்கையும் சுமக்கின்நார். திருவாழியும் திருச்சங்கும் பகைவர்கட்கே ஆயுதங்களாக இருப்பவை; பகவத்துபவத்தில் ஆதிங்கால்பட்டவர்கட்கு அவை ஆபரணங் களாகவே இருப்பவை. ஒருக்கால் திருவாழியும் திருச்சங்கும் எம்பெருமானுக்கு நிரூபகங்கள் (முக்கியமான அடையாளங் கன்) என்று வைத்துக் கொண்டாலும், வில்லையும் வாளையும் சுமப்பதற்கு இளைய பெருமாளைப்போல் ஒருவர் இல்லையே என்று ஏங்குகிறார் ஆழ்வார். 9, திருவாய். 8.3 : 6