பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் 7 “ஆளும் ஆளார்; ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்: வாளும் வில்லும் கொண்டுபின் செல்வார் மற்றில்லை' என்பது அவர் திருவாக்கு மடாதிபதிகள் தம்முடைய முக்கோலையும் ஒரு சீடர் கையிலே கொடுத்துத் தாம் கைவீசிக் கொண்டு போகா நிற்க, அழகே வடிவமாகவும் மிருதுத் தன்மையே இயல்பாகவும் கொண்ட எம்பெருமான் இவ்வாயுதங்களைச் சுமக்க ஆள் வைத்துக் கொள்ள வேண்டாவோ என்பது ஆழ்வாரின் நினைப்பு. இங்கே நம் பிள்ளை ஈடு இன் சுவை மிக்கது; இரண்டு உலகங்களிலும் பரிக்கைக்கு ஆள் இல்லை; தனியே ஒருவரை ஆளவேண்டும் என்று இருக்கிறார். நித்திய சூரிகள் பகவானுடைய அநுபவத்திலேயே நோக்குள்ளவர்கள்; சம்சாரிகள் ஐம்புல இன்பங்களில் நோக்குள்ளவர்கள். (ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்) ஆபரணமான திவ்விய ஆயுதங்கள் அவனுடைய மிருதுத்தன்மையாலே மலை எடுத்தாற் போலே சுமையாய்த் தோற்றுகிறது இவர்க்கு' என்ற ஈட்டுப் பகுதியின் இன்சுவை காண்க. பெருமான் நடக்கும்போது மாறி மாறியிடும் திருவடி களிலும் வீசுகின்ற திருத்தோள்களிலும் சொட்டும் அழகு சொல்லுந் தரமன்று. மையோமர கதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ!இவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்’** என்று கம்பநாடன் அவன் அழகை வருணிக்கின்றானல்லவா? மேகம் தனியே நடப்பது போலவும், ஆண் யானை கம்பீர 10. திருவாய். 8.3:3 11. கம்பரா - அயோத். - கங்கைப், !