பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மலைநாட்டுத் திருப்பதிகள் மாக நடப்பது போலவும் அவன் நடை இருப்பதாக அன்றோ கவிஞன் பேசுகின்றான்? எனவே, அந்த அழகு சொட்டும் திருவடிகட்கும் திருத்தோள்கட்கும் மங்களாசாசனம் செய்வாரில்லையே என்று கவல்கின்றார் ஆழ்வார். "தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக்கானேன்; நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே' (தாள் - திருவடி, கைகளை ஆர - கைகளார: வயிறார உண்ண என்பாரைப் போல; நாளும் நாளும் - நாள் தோறும்; ஞாலம் - பூமி.) என்ற பாசுர அடிகளில் ஆழ்வார் மனங்கவல்வதைக் காணலாம். தொழக்காணேன் என்றதில் இன்னார் தொழ என்பது வெளிப்படையாகக் குறிப்பிடப்பெறாமையால், "பிறர்தொழக் காணேன்', ‘நான் தொழும்படி காணேன்" என்று இரண்டு வகையாகவும் பொருள் கொள்ளலாம். ஈண்டு ஆறாயிரப்படி அருளிச் செயலில் தான் எழுந்தருளும்போது அவன் திருவடிகளையும் திருத்தோள்களையும் என்னுடைய கைகளின் விடாய் திரும்படி தொழக் காணப் பெறு கின்றிலேன்' என்று காணப்பெறுவதால், ஆழ்வார் தாம் தொழப் பெறாமைக்கு வருந்தி அருளிச் செய்வதாகக் கொள்ளலாம். மற்றொரு பொருளும் பொருந்தும். இப் பாசுரத்தின் முதல் மூன்றடிகளாலும் பரிபவர் இல்லாமைக்கு வருந்தி, ஈற்றடியினால் தம்முடைய பரிவின் மிகுதியைக் காட்டுகின்றார் ஆழ்வார். இங்கே, 'பரமபதத்திலேயிருந்து 12. திருவாய். 8.3:3