பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{} மலைநாட்டுத் திருப்பதிகள் என்பது பாசுரம். இதில் "பெரிய பிராட்டியார் வாழும் இடம் எனப் பொருள்படும் பூரீநிவாசன் என்ற வடமொழிப் பெயர் திருவாழ் மார்பன்' என்ற அழகிய தமிழ்ப் பெயராக மாறிக் கிடப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். ஸ்வகார் யார்த்தமாகப் போகிறாரும் வருகிறாரும் திருப்பரிசாரத் தேறப் போகிறாராகவும் வருகிறாராகவும் நிச்சயித்து' என்பது ஆறாயிரப்படி, இனி ஈடு: ஸ்வகார்யத்தாலே த்வரித்துப் (வேகப்பட்டுப்) போவாரைத் தம் தசையை (நிலையை) அறிவிக்கப் போகிறார்கள் என்றும், அங்கு நின்றும் வருவாரைத் தம்மையழைக்க வருகிறார்கள் என்றும் இருப்பர்’. ஆயினும், இவர் நினைத்திருந்தபடி ஒருவரும் தம் மருகே வரக் காண்கின்றிலர். எம்பெருமானுக்குப் பரிவார். ஒருவரும் இல்லாதிருக்கின்ற இந்த நிலவுலகில் சங்கு சக்கரங் களைச் சுமந்து கொண்டு உம்முடன் ஒரு பக்கத்தில் கூடவே திரியும் அடியான் ஒருவன் திருநகரியில் திருப்புளியடியில் உளன்” என்று அவர்கள் திருவண்பரிசாரத்து எம்பெரு மானிடம் தெரிவிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பம், எவரும் தம்மிடம் வராததனால் இனி என் செய்வது? என்று ஏங்குகின்றார். 'எல்லாம் வாசுதேவன்' என்று சொல்லக்கூடிய மகாத்மா கிடைப்பது அருமை என்று எண்ணிக் கொண்டிருக்கும் எம்பெருமானிடம் அருமையன்று: திருப்புளியடியிலே உளர் என்று சொல்ல வேண்டும் என்பது ஆழ்வாரின் பேரவா. இங்ஙனம் ஏங்கிக் கிடக்கும் ஆழ்வார் எம்பெருமானையே கேட்கத் துணிந்து விடுகின்றார். 'என்றே என்உன் ஏரார் கோலத் திருந்து அடிக்கீழ்