பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் {{ நின்றே ஆட்செய்ய நீகொண்டு) அருள நினைப்பதுதான்?’’** (என்றே எப்பொழுதோ?; ஏர் ஆர் - அழகு விஞ்சின; நின்றே ஆள்செய்ய - நிலை நின்று அடிமை செய்ய, கொண்டு அருள - அங்கீகரிக்க.) என்ற பாசுரப் பகுதியில் இங்ங்னம் கேட்பதைக் காண் கின்றோம். தானாக அடிமை செய்யப் புகுவது குறிக்கோள் அன்று; ஏவமற்று அமரர் ஆள்செய்வார்’ என்றபடி எம்பெருமான் ஏவ, தான் பணி கொள்வ தன்றோ சீரியது என்று எண்ணுகின்றார். அங்ஙனம் அவன் திருவுள்ளம் பற்றியிருக்கும் நாள் எதுவோ என்று வினவுகின்றார். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் கிளர்ந்தெழுந்த வண்ணம் எம்பெருமானைச் சேவிக்கும் நோக்கத்தில் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். வீற்றிருக்கும் திருக் கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலங் கொண்டு கமலவல்லி காச்சியாருடன் சேவை சாதிக்கும் எம்பெருமான் திருவாழ் மார்பனைக் கண்ணாரக் கண்டு வணங்குகின்றோம். 'வீற்றிருந்து ஏழ்உலகும் தனிக்கோல் செல்ல வீவுஇல்சீர் ஆற்றல்மிக்(கு) ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்தன்னை போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல்மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி.என் னகுறை எழுமையுமே?’’’ (விவுஇல் சீர் - முடிவில்லாத கல்யாண குணங்கள்; ஆற்றல் - வலிமை (இங்கு சாந்தி என்னும் பொருளது): வெம் மா - கொடிய கேசி என்னும் குதிரை.) 16. திருவாய், 8.3:8 17. டிெ 4.5:1