பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

h 2 மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற திருவாய்மொழியைப் பாடிப் பரவுகின்றோம். இதே நினைவுடன் திருக்கோயிலை வலம் வருகின்றோம். 'திருவண்பரிசாரம் என்ற பெயர் திருப்பரிசாரம் என்று திரிந்து இப்போது திருப்பதி சாரம் என்றே மருவி வழங்கி வருகின்றது. திருவண்பரிசாரத்து எம்பெருமானைத் தொழுதால் திருப்பதி எம்பெருமானைச் சேவிக்கும் பலன் உண்டு என்ற நம்பிக்கையும் இப்பகுதி மக்களிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. இந்த நம்பிக்கையால் திருவண் பரிசாரம் என்ற திவ்விய தேசத்தின் பெயர் திருப்பதி சாரம் என்றே அவர்களிடம் நிலைத்து விட்டது. திருப்பதி ஏழுமலையானை நாம் அறிவோம். அலர்மேல் மங்கைத் தாயாரையும் தனியாக ஒதுக்கி வைத்து விட்டு இரவும் பகலும் ஓயாமல் நின்ற கோலத்துடன் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கட்குப் பேட்டி’ அளித்து வரும் பெருமானல்லவா அவன்? அங்ங்னம் நின்ற களைப்புத் தீரத் "திருப்பதி சாரத்தில் இருந்த திருக்கோலத்திலிருந்து கொண்டு சேவை சாதிக்கின்றான் போலும் என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. இந்தத் திருக்கோயிலில் நம்மாழ்வாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. தாயைப் பெற்ற பாட்டியார் ஊரில் இந்தச் சலுகை கூடவா இல்லாமல் போகும்? இதைத் தவிர, அண்மையில் அடவியில் உள்ள சடாயுபுரம் என்ற கோயிலுக்குச் சொந்த மான நடராசர் சிலையும் வேறு பொருள்களும் பாதுகாப்பிற் காக இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. அந்த ஆடலரசனுக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டுக் கோயிலை விட்டு வெளி வருகின்றோம், மலைநாட்டுத் திருப்பதிகளுள் திருமதில் கவர்களிலும், உள்சுற்றுச் சுவர்களிலும் திருமண் காப்பிட்டதை இந்தத் திருப்பதியில் மட்டிலுமே காண் கின்றோம். வடகலை சம்பிரதாயத்தில் இதனைக் காண்கின்